41ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை நிகழ்வு – யாழ்ப்பாணத்தில் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25-27 திகதிகளில் வெலிக்கடைவெஞ்சிறையிலே  53 தமிழ் அரசியல் கைதிகளையும் மேலும் அதே ஆண்டு கறுப்புஜுலை கலவரத்தில் கொல்லப்பட்ட 3000க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ்மக்களையும் நினைவு கூர்ந்து ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி(DTNA) கட்சியின் யாழ் மாவட்ட கிளையினரால் அஞ்சலி கூட்டம்  நேற்றையதினம் (ஜூலை27) மாலை யாழ் மத்திய கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில்  நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் , பொதுமக்கள் , உறவுகள் என பலர் கலந்து கொண்டு நினைவுரைகளை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article