காரைநகர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் பிரதேச புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் காரைநகரில் உள்ள மூன்று பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று (ஜனவரி 10) காரைநகர் பிரதேச சபை செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
இந்த செயற்றிட்டம் டெங்குச் செயற்பாட்டினை கட்டுப்படுத்தும் நோக்கோடு பிரதேச சூழலை தூய்மைப்படுத்தி உக்கும் கழிவுகளை தென்னங்கன்றுகளுக்கு பசளையாக்குவதுடன் உக்காத கழிவுகளை தரம்பிரித்து பிரதேச சபை மூலம் அகற்றுதல் பிரதான நோக்கமாகும்.
இவ் செயற்றிட்டத்தில் காரை சுத்தரமூர்த்தி வித்தியாலயம், தோப்புக்காடு மறைஞான சம்பந்தர் வித்தியாலயம், ஊரி அ.மி.த.க வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலை மாணவர்களுக்கு ஒவ்வொரு மாணவர்களுக்கு மூன்று தென்னங்கன்றுகள் வீதம் வழங்கப்பட்டது. இதன் மூலம் பிரதேச சூழல் பசுமையடைவது குறிப்பிடத்தக்கதாகும்.