33 ஆண்டுகளின் பின்பு இயங்கும் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மயிலிட்டி ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம் 33 ஆண்டுகளிற்கு பின்பு மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது.

இதன் மூலம் அருகிலுள்ள கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் பொது மக்கள் தமது அடிப்படை மருத்துவ தேவையை தடையின்றி பெற்றுக் கொள்ள கூடியதாக உள்ளது.

வெளி நோயளார்களுக்குரிய சேவைகள் வாரத்தின் 7 நாட்களும் வழங்கப்படுவதால் தூர இடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

குறிப்பிட்ட இந்தப் பிரதேசம் உயர் பாதுகாப்பு வலையமாக இருந்து கடந்த சில ஆண்டுகளிற்கு முன்பே மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Share this Article