ரிக் ரொக் எடுக்க ஆற்றுக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மட்டக்களப்பில் ரிக் ரொக் எடுக்க ஆற்றுக்கு சென்றவேளை தோணி கவிழ்ந்ததில் 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு சீலாமுனையைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் ரிக் ரொக் வீடியோ எடுப்பதற்காக ஆற்றிக்கு தோனியில் சென்றதையடுத்து இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் ஆற்றில் சென்று கொண்டிருந்தபோது தோணி கவிழ்ந்ததையடுத்து ஆறு பேரும் நீந்திக் கரைக்கு வர முயற்சித்த போது, ஒரு இளைஞன் மாத்திரம் ஆற்றில் மூழ்கி கொண்டிருந்ததை பார்த்து நண்பனை காப்பாற்ற சென்ற மற்ற இளைஞனும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

இவர்கள் சீலாமுனைப் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய தவசீலன் கிருசாந்தன் என்ற இளைஞனும் மாமாங்கத்தை சேர்ந்த
18 வயதுடைய பிரபாகரன் பிருந்தயன் என்ற இளைஞனுமே இவ்வாறு ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ஏனையவர்கள் மீனவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Article