வேல்ட் விசன் நிறுவனத்தின் பிரதிநிதிகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றையதினம் (25.02) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் “Together We Rise”எனும் பெயரில் ஆரம்பிக்கப்படவுள்ள 3 வருடங்களுக்கான திட்டத்திற்கான சமூக பாதுகாப்பு அமைப்புக்களின் மேம்பாட்டு திறன் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடலாக இது அமைந்தது.
இக் கலந்துரையாடலில் வேல்ட் விஷன் நிறுவனத்தின் பிரதிநிதிகளான திட்ட மானியங்களின் செயற்பாட்டு முகாமையாளர் பெஞ்சமின் தாஸ், நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரி.றொசாந்தன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட திட்ட முகாமையாளர் ஜூட்நிஷாந்தன் ஆகியோர் பங்குபற்றிருந்தனர்.