2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
3 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தில் திருத்தம் கொண்டுவரும் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மின் கட்டணங்கள் ஏற்கனவே இம்மாதம் திருத்தத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் மின் கட்டணங்கள் திருத்தப்படாது எனக் குறிப்பிட்டார்.
3 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை மாற்றியமைக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் இணைந்து இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளனர்.
மின்சாரம் வழங்குவதற்கான தற்போதைய பொதுக் கொள்கை வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மின் கட்டணம் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு, மின் கட்டண திருத்தத்தை காலாண்டுக்கு ஒருமுறை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.