27 மில்லியன் பெறுமதியான கேரளகஞ்சாவை கடற்படை கைப்பற்றியது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

27 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட121 கிலோ கிராம் கேரளகஞ்சாவை  கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் மன்னாரில் உள்ள வங்காலைமற்றும் நெடுந்தீவுக்கு அப்பால் உள்ள உள்ளூர் கடல் பகுதியில் கடற்படையினர்நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது இந்த கஞ்சாகைப்பற்றப்பட்டுள்ளதுடன் 19 முதல் 56 வயதுக்குட்பட்ட 05 சந்தேக நபர்களையும்கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இதனுடன், குறித்த கேரள கஞ்சாவை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாகக்கூறப்படும் இரண்டு டிங்கி படகுகளும் கடற்படையினரால்பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

இரண்டு டிங்கி படகுகள், கேரள கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் மேலதிகவிசாரணைகளுக்காக நெடுந்தீவு மற்றும் வங்காலை பொலிஸ் நிலையங்களில்ஒப்படைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share this Article