அனலைதீவு 50 ஆவது இலக்கியச் சந்திப்பு எதிர்வரும் 29, 30 ஆம் திகதிகளில் அனலை ஐயனார் அன்னதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த இலக்கியச் சந்திப்பு இம் மாதம் கடந்த 8,9 ஆம் திகதிகளில் நடைபெறுவதாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து கலந்து கொள்ள விரும்புபவர்களுக்கு கால அவகாசம் போதாதென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டமையால் 29,30 ஆம் திகதிகளில் மாற்றி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
29.07.2023 (சனிக்கிழமை) முதல்நாள் நிகழ்வுகள்
காலை 9.30மணி – வருகை பதிவு
அண்ணாவியார் ஜெயராஜா அரங்கு
——————-
ஏலேலோ ஐலசா
நெய்தல் நிகழ்த்துக் கலைகள்
தொடக்க உரை – தமயந்தி
கடற் பொருளாதாரமும்-
கடற் சூழலியலும்
-அம்ரிதா ஏயெம்-
நெடுந்தீவு மக்களின் வாழ்வியல் வழக்காறுகள்
-அ சிவஞான சீலன்-
புத்தக அறிமுகம்/ விமர்சனம்
“வெள்விரி”
பிற்பகல் நிகழ்வுகள்
தெளிவத்தை ஜோசப் அரங்கு
மலையகம்-200
-லோகநாதன், லீலாவதி-
புத்தக அறிமுகம்/ விமர்சனம்
“கோ.ந.மீனாட்சியம்மாள் படைப்புக்கள்”
மொழிபெயர்ப்பாளர் தேவா அரங்கு
ஈழத்தவரின் கவிதை மொழிபெயர்ப்பு முயற்சிகள்
-சி.ரமேஷ்-
கவனத்தில் கொள்ளப்படாத ஈழத்தவரின் மொழிபெயர்ப்புகள்.
-சத்தியதேவன்-
பூமியின் பல்வேறு உலகங்களை பல்வேறு மொழிகளூடாக அறிதல்.
தமிழ் கூறும் நல்லுலகின் வாய்ப்புகளும் செயற்பாடுகளும்
-சி. ஜெயசங்கர்-
புத்தக அறிமுகம்/ விமர்சனம்
“அனோனிமா”
புத்தக அறிமுகம்
“உன்னத சங்கீதம்”
30/07/2023 (ஞாயிற்றுக்கிழமை)
இரண்டாம் நாள் நிகழ்வுகள்
குப்பிழான் ஐ.சண்முகம் அரங்கு
விலங்கிடப்படும் விருந்து
-பெரு நிறுவனங்களில் அடைவு வைக்கப்படும்
வேளாண்மையும் உணவு இறையாண்மையும்.
-Dr. சுதாகரன் அன்ரன் மரியநாயகம்-
யாழ் மாவட்ட பசுமைச் சூழலும் மரநடுகையும்
-வடகோவை வரதராஜன்-
இயற்கை வேளாண்மையும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும்
-ஏ.ஆர்.எம்.பர்ஸான்-
கே.இக்பால் அரங்கு
பின் நவீனத்துவமும் ஈழத்து இலக்கியவெளியும்
-ஓர் அறிமுகம்-
-றியாஸ் குரானா-
புத்தக அறிமுகம்
“பிரதிகளுக்குள் பதுங்கியிருக்கும் வன்முறை”
புத்தக அறிமுகம் –
எஸ்.எல்.எம் ஹனீபாவின்
“தீரா நினைவுகள்”
பிற்பகல் நிகழ்வுகள்
செல்வி அரங்கு
போராட்டத்தில் மறைக்கப்பட்ட முகங்களும்
மறுக்கப்பட்ட பக்கங்களும்
-ஞானசக்தி-
பெண்ணிலைவாத நோக்கில் ஈழத்து நவீன கவிதைகள்
-சு. குணேஸ்வரன்-
50 ஆவது இலக்கியச் சந்திப்பின் வரவு செலவு சமர்ப்பித்தல்