23 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து கல்வி அமைச்சு…!
நவம்பர் 23 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து, பிராந்திய, வலயக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கொரோனா நெருக்கடி காரணமாக நீடிக்கப்பட்ட விடுமுறைக்கு பின்னர் நவம்பர் 23 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிராந்திய, வலயக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை தாங்கள் தொடங்கியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
கொரோனா தொற்று காலப்பகுதியில் பாடசாலைகளை பாதுகாப்பான முறையில் மீண்டும் திறந்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முகமாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.