பாராளுமன்றத்தில் நேற்று (மார்ச் 10) நடைபெற்ற விசேட அறிக்கையில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மாற்றியமைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானங்களை அறிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது, மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் 2028 ஆம் ஆண்டிலிருந்து புதிய பரீட்சை முறை அமல்படுத்தப்படும். இதற்காக, புலமைப்பரிசில் பரீட்சையின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக நிபுணர் குழுவொன்றை அரசாங்கம் நியமிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், புலமைப்பரிசில் பரீட்சை தற்போது போட்டி நிலையை அடைந்துள்ளமை, பாடசாலைகளுக்கிடையிலான தரமாற்றத்தால் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். இதைத் தடுக்கும் நோக்கில், பாடசாலைகளுக்கிடையிலான தர வேறுபாடுகளை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பிரதமர் அறிவித்தார்.