2025 பெப்ரவரியில் கொண்டு வரப்படும் வரவு செலவுத் திட்டத்தில் அரசஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் எனஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியின் முதலாவது மக்கள்பேரணி நேற்றையதினம்(ஒக். 19) தங்காலையில் இடம்பெற்ற போதே ஜனாதிபதிமேற்கண்டவாறு தெரிவித்தார்.
“துணிச்சல் மிக்கவர்களால் முடியாதது எதுவுமில்லை என்பதைநிரூபித்துள்ளோம்.ஆரம்பத்தில், பொருளாதார ஸ்திரத்தன்மையைபிரதிநிதித்துவப்படுத்துவதே எங்களின் மிகப்பெரிய சவாலாக இருந்தது.மிகக்குறுகிய காலத்திற்குள், நாட்டுக்கு சாதகமான ஜனநாயக அமைப்புகளுடன் மிகச்சிறந்த ஒப்பந்தங்களைச் செய்து நம்பகமான பொருளாதாரத்தைஉருவாக்கியுள்ளோம்.பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்குள் பட்ஜெட் தாக்கல்செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அந்த வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் அரசஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் பாடசாலை மாணவர்களுக்குவழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் தொடர்பில் அவதானம்செலுத்தியுள்ளோம். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஏழைகள் மற்றும்விசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை நிச்சயமாகஅதிகரிப்போம்” என்றார்.