025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, பொறியியல் தொழில்நுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டியம் (தேசிய), நாட்டியம் (பரதம்), சங்கீதம் (கீழைத்தேய), சங்கீதம் (மேலைத்தேய), நாடகமும் அரங்கியலும் (சிங்களம்), நாடகமும் அரங்கியலும் (தமிழ்), நாடகமும் அரங்கியலும் (ஆங்கிலம்) ஆகிய பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் மார்ச் 9 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.