2021ம் ஆண்டுக்கான வேலணை பிரதேச சபைக்கான பாதீடு நிறைவேறியது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் (பாதீடு) ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையின், வரவு செலவுத் திட்டத்திற்கான விசேட கூட்டம் இன்றையதினம் சபையின் தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி தலைமையில் இடம்பெற்றிருந்தது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 10 உறுப்பினர்களும், எதிராக 9 உறுப்பினர்களும் வாக்களித்த அதேவேளை ஒரு உறுப்பினர் நடுநிலமை வாகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 6 உறுப்பினர்கள், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 2 உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 10 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர் என 9 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்த்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்திருந்தார்.

Share this Article