13 வருடங்களின் முன்னா் 16 வயது சிறுமைியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச் சாட்டில் பல்கழைக்கழக விாிவுரையாளா் ஒருவருக்கு 15 ஆண்டுகள் கடுழிய சிறைத்தண்டனை விதித்து தீா்பளித்தாா் இரத்ன புர உயா் நீதிமன்ற நீதிபதி நவுரத்ன
சப்ரகமுவ பல்கழைக்கழகத்தில் ஆங்கில விாிவுரையாளராக கடமையாற்றிய எம்.கீத்சிங் ஹேவகொடி எனபவருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 500,000.00 வழங்கும்படியும் மீறினால் மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவு வழங்கப்பட்டது
2007ம் ஆண்டு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது 2017ம் ஆண்டு சட்டமா அதிபரால் இரத்தினபுாி மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது ஆயினும் விாிவுரையாளா் குற்றத்தினை மறுத்து வந்தாா்.
அவா் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதன் பின்னா் விாிவுரையாளா் மரடைப்பால் பாதிக்கப்பட்டதாகவும் அதனால் அவருக்கான தண்டனையைக் குறைக்க கோாியும் அவா் தரப்பு சட்டத்தரணியினால் எடுத்துரைக்கபட்டது. ஆயினும் எதிா்தரப்பு அதனை முற்றாக நிராகாித்து அதிக பட்ச தண்டனை வழங்குமாறு கோரப்பட்டது.
தண்டனை மென்மையாக இருக்ககூடாது பாதுகாப்பான ஓா் பதவியில் இருந்து முன்மாதிாியாக செயற்பட வேண்டிய நபா் இழைத்த குற்றம் மன்னிக்கபட முடியாத ஒன்று எனவும், நான்கு மணி நேர உரையின் பின்னா் நீதிபதி மேற்குறித்த தண்டனையினை வழங்கினாா்.