தற்போதைய கொரோனா வைரஸ் தாக்கம் மிகவும் தீவிரமடைந்த நிலையில் காணப்படுவதாலும் புங்குடுதீவு வேலணைப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டமையாலும் நெடுந்தீவின் சுகாதாரப் பாதுகாப்பு நிலமைகளைக் கருத்திற் கொண்டு நேற்று முதல் (நவம்பர் – 01) 14 நாட்கள் போக்குவரத்துக்களை தடை செய்து மக்கள் உள்வருவதனையும் வெளிச் செல்வதனையும் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இன்றைய தினம் (நவம்பர் – 01) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொள்ளப்ப்டது. இக்கலந்துரையாடலில் பிரதேச செயலளார், பிரதேச சபைத்தலைவர், மதகுருமார்கள் கடற்படைப் பொறுப்பதிகாரி பொலிஸ் பொறுப்பதிகாரி சுகாதார, பரிசோதகர் சமூகஅமைப்புத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் இக்கலந்துரையாடலிலேயே கொரோனா வைரஸ்தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் 14 நாட்கள் போக்கவரத்தினை தடை செய்வது எனும் தீர்மானத்துடன் பின்வரும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன
பொதுப்போக்கவரத்து சேவை முற்றாக நிறுத்தப்படுகின்றது தபால் சேவை கடற்படையூடாக மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளல்
யாழில் இருந்து அலுவலகத்திற்கு வரும் பணியாளர்கள் கடமைக்கு சமூகமளிப்பது நிறுத்தப்பட்டுள்ளது ஏற்கனவே 26ம் திகதி புங்குடுதீவில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் பயணம் செய்த பேருந்தில் பயணம் செய்த அரச உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
நெடுந்தீவு வங்கி முகாiயாளரும் குறிப்பிட்ட பேருந்தில் பயணித்தமையால் அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆயினும் வங்கி நடவடிக்கையினைக் கருத்திற்கொண்டு பாதுகாப்பான முறையில் தற்காலிக புதிய முகாமையாளர் ஊடாக கடற்படையினரின் போக்குவரத்தினை பயன்படுத்தி வங்கி செயற்பாட்டினை செயற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன் தற்போது வங்கிப்பகுதி தொற்று நீக்கி செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது.
மருத்துவ தேவையின் நிமித்தம் உடனடியாக யாழ் கொண்டு செல்ல வேண்டிய நோயளர்கள் அம்புலன்ஸ் ஊடாக வைத்தியரின் சிபார்சுடன் பிரயாணம் செய்ய முடியும்.
பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி எவ்வித தடங்கலும் இல்லாது நடைபெறும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கிராம சேவையாளர் ஊடாக அனுமதி பெற்று படகு மூலம் குறிகட்டுவான் செல்ல முடியும் யாழ்ப்பாணத்தில் இருந்து அவர்கள் பொருட்களை குறிகட்டுவானுக்கு பெற்று கொண்டுவரலாம் ஆனாலும் நெடுந்தீவு வியாபாரிகள் யாழ்ப்பாணம் செல்ல முடியாது.