நெடுந்தீவு தெற்கு விவசாயிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பாடசாலைத்தோட்ட அங்குரார்பண நிகழ்வும் பாடசாலை மாணவருக்கான பயன்தரு மரங்கள் வழங்கலும்
ஸ்ரீஸ்கந்தா வித்தியாலய அதிபர் ந.கலைவாணி அவர்களால் நெடுந்தீவு தெற்கு விவசாயிகள் சங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நெடுந்தீவு பழையமாணவர் மன்ற தலைவர் மதிப்புக்குரிய நடராஜா சுப்பிரமணியம் அவர்களின் நிதிப்பங்களிப்பில் பாடசாலைத்தோட்டமானது நிறுவப்பட்டது.
அடுத்து தோட்டத்திற்கான பழமரக்கன்றுகளினை சபரிஷ் அறக்கட்டளையினர் தாமாகவே முன்வந்து வழங்கியிருந்தனர்
மரக்கறி விதைகள் கன்றுகள் சங்கத்தினுடைய தலைவர் அவர்களாலும் பாடசாலை மாணவர்களாலும் அதிபர் ஆசிரியர்களாலும் ஏற்பாடுசெய்யப்பட்டது
அதனைத்தொடர்ந்து J/02கிராம அலுவலர் பிரிவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சபரிஷ் அறக்கட்டளையினரால் “வளமான எதிர்காலம்” நோக்கி என்ற எண்ண கருவுடன் பயன்தரு எலுமிச்சை மரங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு சரியானமுறையில் வளர்த்து எடுப்போருக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்தப்பட்டது
நிகழ்வில் தீவக கோட்டக்கல்வி அதிகாரி, பிரதேசசபை தவிசாளர், அபிவிருத்தி உத்தியோகஸ்தர், கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகஸ்தர் எமது சங்கத்தினர் நலன் விரும்பிகள் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்