கிளிநொச்சியில் நடைபெற்ற நெல் அறுவடை விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நெல்லுக்கான உத்தரவாத விலை 100 ரூபாவாக நிர்ணயிக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இன்று (பெப்ரவரி 12) மகிழங்காடு கமக்காரர் அமைப்புக்குட்பட்ட வயலில் அறுவடை விழா நடைபெற்றது.
அந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார்.
நெல்லுக்கான உத்தரவாத விலையை கிலோ ஒன்றுக்கு 100 ரூபாவாக நிர்ணயித்து நெல் கொள்வனவு செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அதேவேளை, இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் மனு ஒன்றும் ஜனாதிபதியால் கையளிக்கப்பட்டது.