10 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 30 வயது ஆசாமி! – சாவகச்சேரியில் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் 30 வயது குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவனைப் பிரிந்து வாழும் பெண் ஒருவரின் 10 வயதுச் சிறுமிக்கே அவரது அயல் வீட்டைச் சேர்ந்த 30 வயது குடும்பத் தலைவரால் பாலியல் தொந்தரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுமி வீட்டில் உறக்கத்திலிருந்த நேரத்தில் குடும்பத்தலைவர் சிறுமியின் ஆடைகளை களைய முற்பட்டபோது தாயார் அதனைக் கண்டுள்ளார். இதனையடுத்து குடும்பத் தலைவர் தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this Article