நேற்று செவ்வாய்க்கிழமை (19 மார்ச் ) காலை டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்த பயணிகள் இருவரிடம் இருந்து சுமார் 5 கிலோ எடையுள்ள தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், பின்னர் சோதனை செய்து தங்க நகைகளை கண்டுபிடித்ததாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
குறித்த பயணிகள் இருவரும் அம்பலாங்கொடை மற்றும் யாழ்ப்பாணம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.