அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அடையாளம் காணப்பட்ட 02 மில்லியன் அஸ்வெசும பயனாளிகளில், 1.5 மில்லியன் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று(ஓகஸ்ட் 29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

முதற்கட்டமாக 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபா ஏற்கனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அஸ்வெசும’ குறித்த அனைத்து விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம், வார நாட்களில் காலை 9 மணி முதல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும்.

ஊனமுற்றோர், முதியோர், சிறுநீரக நோயாளர் ஆகியோருக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

Share this Article