கண்டி ஹந்தான மலைத்தொடரில் நடைபயணத்தின் போது ராகம மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சுமார் 180 மாணவர்கள் மோசமான வானிலை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக வெளியில் வரமுடியாது தவித்த 180 மாணர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போதே அவர்கள் 180 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவர்களில் பலர் தற்போது வைத்திய பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.