வேலணை பிரதேச சபையின் சோலைவரி அறவிடும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வேலணை பிரதேச சபையின் வரலாற்றில் முதல் தடவையாக சோலைவரி அறவிடும் வேலைத்திட்டம் ஆரம்பமாகி இருக்கின்றது

அண்மையில்  சோலைவரி அறவிடும் நடமாடும் வேலைத்திட்டம் வேலணை தெற்கு J/17  கிராம அலுவலர் பிரிவில் நடைபெற்றது

வடமாகாணத்தில் உள்ள பிரதேச சபைகளில் மிகவும் வருமானம் குறைந்த சபைகளில் வேலணை பிரதேச சபையும் ஒன்று தன் சக்திக்கு அப்பாற்பட்டு  வேலணை பிரதேச சபை தன்னால் முடிந்த வேலைத்திட்டங்களைவேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது

வேலணை பிரதேச சபையின் சபை வருமானத்தில் அண்மையில் இரண்டு கிரவல் வீதிகள் முதற் கட்டமாக பகுதி அளவில்  நயினாதீவில் போடப்பட்டிருந்தன இனிவரும் நாட்களில் அவை நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறும் இடத்து தார்வீதிகளாக புனரமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது

Share this Article