வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவரை மறித்துபோராட்டம் – பிரதேச சபை உறுப்பினர்கள் !!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வேலணைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு அப்பிரதேச மக்கள்பிரதிநிதிகளாகிய வேலணை பிரதேச சபை உறுப்பினர்களைபுறக்கணித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  சபையின் உறுப்பினர்கள் பிரதேசஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவனை பிரதேச செயலக வளாகத்துக்குள் நுழைய விடாது போராட்டம் ஒன்றைமுன்னெடுத்தனர்.

இன்று (செப். 19) காலை முன்னெடுக்கப்பட்ட குறித்த எதிர்ப்புப் போராட்டத்தால்இணைத் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிபிரதேச செயலக சூழலில் பெரும் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

குறித்த போராட்டத்தின் போது வேலணை பிரதேச மக்கள் பிரதிநிதிகளானஉள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இருவரை தவிர ஏனையவர்கள்அனுமதிக்கப்படாது தடுக்கப்பட்டதுடன் , இதனை சுற்றறிக்கையை காரணம்காட்டி தப்பித்துக்கொள்ள இணைத்தலவர் முற்பட்ட வேளை ஏனைய பிரதேசசபைகள் கட்சிக்கு ஓர் உறுப்பினரை அனுமதித்திருந்த நிலையில் இங்கு அரசியல்ரீதியாக பாரபசம் காட்டி உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டடுள்ளது என சுட்டிக்காட்டியதை தொடர்ந்து

இணக்கம் தெரிவித்த ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதேச இணைத்தலைவர், கூட்டத்திற்கு உறுப்பினர்கள் அனைவரையும் சமுகமளிக்குமாறு அழைப்புவிடுத்தார்.

இன்நிலையில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று காலை 10.15 மணிக்குபிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்திரஜீவன் தலைமையில் ஆரம்பமானது.

கூட்டம் ஆரம்பமான நிலையில் கூட்டத்தில் முக்கியமானவர்களுக்கான ஆசன ஒழுங்குபடுத்தலில் தவிசாளருக்குமுக்கியத்துவம் கொடுக்கப்படாத நிலை இருந்ததை சுடிக்காட்டியும் அதற்கானஒழுங்கை செய்வதற்கு பிரதேச செயலரும் இணைத் தலைவரும் தட்டிக்கழித்தைஅடுத்து கூட்டத்தில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது  

தொடர்ச்சியாக வாக்குவாதங்கள் நடைபெற்ற நிலையில் பிரதேச சபை உறுபினர்கள் அனைவருக்கும் ஆசனங்கள் வழங்கப்பட்டு கூட்டம் தொடர்ச்சியாகநடைபெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article