தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தின இறுதி நாளான நேற்று (செப்.26) தீவக நினைவேந்தல் குழுவினரால் வேலணை வங்களவடி பொது நினைவிடத்தில் இடம்பெற்றது.
தியாகி திலீபனின் இறுதிநாள் நிகழ்வுகளின் ஓர் அங்கமாகவங்களாவடியில் உள்ள பொது நினைவு தூபியில் காலை 8 .30 மணிமுதல் அடையாள உண்ணாவிரதத்துடன் வேலணை மக்களால் நினைவேந்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் மூன்று மவீரர்களின் தாயாரால் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் திருவுருவ படத்திற்கு முன்னாள் போராளியால் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வேலணை பிரதேச சபையின் தவிசாளர் மலர் தூவிஅஞ்சலித்தார்.

இதேவேளை யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் மணிவண்ணன், மாநகரின்முன்னாள் உறுப்பினர் பார்த்தீன், தழிழரசுக் கட்சியின் மறைத்த தலைவர் மாவைசேனாதிராஜாவின் மகன் கலயமுதன், வேலணை பிரதேச சபையின் உபதவிசாளர் வசந்தகுமாரன், உறுப்பினர்களான பிரகலாதன், கார்த்தீபன், நாவலன், ஞானரூபன் உள்ளிட்டவர்கள் மலர்தூவி அஞ்சலுத்தியதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்களால் மலர் அஞ்சலிகள் செலுத்தப்பட்டதுடன் கலந்துகொண்டோருக்கு நினைவு மரக்கனரறுகளும் வழங்கிவைக்கப்பட்டது.