வெளியாகவுள்ள தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறு பட்டியலிடும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்காக 33, 7591 மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றியிருந்தனர். சுமார் 2888 பரீட்சை நிலையங்களில் இவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

அடுத்த வாரமளவில் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share this Article