தேசிய வெசாக்தின பண்டிகையினை நயினாதீவில் நடாத்துவதனை சுகாதார நிலமைகளைக் கருத்திற் கொண்டு நிறுத்தவேண்டும் என யாழ் மாவட்ட பாரளுமன்னற உறுப்பினர் கௌரவ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அவர்கள் பாரளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (மே – 04) பாரளுமன்றத்தில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் நாம் கொவிட் தீவீர பரவல் தொடர்பாகவும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதற்கான சகல நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றதாக தொவிக்கப்படுகின்றது. மத நிகழ்வுகள் யாவும் கட்டுப்பாடுகளுடன் இடம் பெற வேண்டும் என்பதனையே சுட்டிக்காட்டுகின்ற போதும், இதனை மேற்கொள்வது நல்லது அல்ல என்பதனை தெரிவித்தார்
யாழ்ப்பாணத்தில் சமய நிகழ்வுகள் நடைபெறும் போது சுகாதார விதி முறைகளை மீறியதாக ஆலய நிர்வாகத்தினர் கைது செய்யப்படுகின்றனர். இது தான் நிலமையெனின் தேசிய வெசாக் தினத்தினையும் உடனடியாக நிறுத்தல் வேண்டும்.
நயினாதீவில் இம் முறை தேசிய வெசாக் தினத்தினைக் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்த போதும் தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்கள் எவ்வித எதிர்பினையும் தெரிவிக்கவில்லை ஆயினும் கொவிட் 19 தீவிர பரவல் நிலைமையினைக் கருத்திற் கொண்டு மக்களது பாதுகாப்பிற்காக நிறுத்துமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்
இவ்விடயத்தில் அரசாங்கம் மிகவும் பொறுப்புடன் செயற்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.