வீதியில் காரை வழிமறித்து பனிப்புலத்தில் வாள்வெட்டு- ஒருவர் மருத்துவமனையில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இளவாலை, பனிப்புலத்தில் நேற்று (ஏப்ரல் 8) நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர், கார் ஒன்றை வழிமறித்து தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

பண்ணாகத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த இளவாலைப் பொலிஸார் 25 மற்றும் 30 வயதுடைய இருவரைக் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article