வீண் அச்சம் கொள்ள வேண்டாம் அடுத்த வருடம் தேர்தல் நிச்சயம்!- நீதி அமைச்சர் தகவல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தேர்தல் நடைபெறாது என வீண் அச்சம் கொள்ள வேண்டாம். அடுத்த வருடம் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். இப்போது சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட், தேர்தலை இலக்காகக் கொண்ட பாதீடு அல்ல என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (நவம்பர் 15) நடைபெற்ற பாதீடு தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, தேர்தலை முறையாகவும், சரியாகவும் நடத்துவதற்கு 21ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தல் மோசடிகளை தடுப்பதற்கான சட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது.நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊழல் எதிர்ப்புச் சட்ட வரைவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகத் தற்போது பேசப்படுவதால், இது ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்த பாதீடு எனச் சிலர் விமர்சிக்கின்றனர். இது தேர்தலை இலக்கு வைத்த பாதீடு அல்ல. ஏனெனில் பாதீடு தொடர்பில் அரசு மீது மக்கள் அதிருப்தி அடையலாம்.

பாதீட்டை மக்கள் ஏற்காமல் இருக்கலாம். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை நோக்காகக்கொண்டே பாதீடு முன்வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் தேர்தல் நடத்தப்படும். மக்கள் தமக்குத் தேவையானவர்களை தெரிவுசெய்யலாம்-என்றார்.

Share this Article