இலங்கையில் ஜப்பான் அரசாங்கத்தின் ஜெய்க்கா (JICA ) செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் உலர் வலய விவசாய ஆராய்ச்சி செயற்றிட்டத்தின் கீழ் களப்பணி ஆய்வுக்காக இலங்கையில் இருந்து குழு ஒன்று ஜப்பானுக்குச் சென்றுள்ளது.
ரோக்கியோவில் அமைந்துள்ள ஜெய்க்கா தலைமையகம் மற்றும் பியூகியோகா கியூசு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெறவுள்ள ஐந்து நாள் பயிற்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜெய்க்கா செயற்றிட்ட ஆலோசகர் கலாநிதி கௌவூசோ ஒகாட்டா தலைமையில் சென்றுள்ள குழுவில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா, கல்வி அமைச்சின் அபிவிருத்திப் பிரிவுக்கான மேலதிக செயலாளர் உடவல கமால் ரோகித, கல்வி அமைச்சின் உயர்கல்விப் பிரிவுக்கான திட்டமிடல் பணிப்பாளர் ஜி. எம். ஆர். டீ. அபோன்சு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி பேராசிரியர் சீ. வசந்தரூபா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.