விளையாட்டு உபகரணங்கள், ஆற்றுகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்கள் மற்றும் கலைமன்றங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், ஆற்றுகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (27.12) காலை யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மடம் பாடசாலையில் நடைபெற்றது.

இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 14 கலைமன்றங்களுக்கு ஆற்றுகைப் பொருட்களும், 100 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் அதிதிகளால் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இ.சந்திரசேகர் , யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் ,  ஆளுநர் நா. வேதநாயகன் ஆகியோரும் விளையாட்டுக் கழகங்கள் மற்றும் கலைமன்றங்களின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Share this Article
Leave a comment