விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஆனையிறவில் நடந்த வீதி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி, சாரையடியைச் சேர்ந்த 27 வயதான சத்தியமூர்த்தி சத்தியன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஹையேஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதில் படுகாமயடைந்த இளைஞரே சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

Share this Article