விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பயனின்றிப் பரிதாப மரணம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணியில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த 42 வயதான யோ.பிரகலாதன் என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் சிறு கைத்தொழில் பிரிவு உத்தியோகத்தராவார்.

இவர் பயணித்த மோட்டார் சைக்கிளும், மற்றொரு மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து சம்பவித்திருந்தது. விபத்தில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தி வந்த இருவரும் காயமடைந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்திருந்த பிரகலாதன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் இரவு அவர் உயிரிழந்தார்.

Share this Article