விசா காலம் நீடிக்கப்படாத காரணத்தால் ஜோர்தானில் 200 இலங்கையர் பாதிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

விசா காலம் நீடிக்கப்படாமையினால் ஜோர்தானிலுள்ள தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் சுமார் 200 இலங்கைப் பணியாளர்கள் பாதிக் கப்பட்டுள்ளனர்.

இந்த இலங்கையர்கள் தற்போது ஜோர்தானின் சஹாப்பிலுள்ள அல் ஜ/மாத் கைத்தொழில் வலயத்திலுள்ள அசீல் என்ற தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.

விசா காலம் நீடிக்கப்படாமை உள்ளிட்ட மேலும் பல பிரச்சினைகளை தாம் எதிர்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

Share this Article