யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தின் பின்புறமாக வைரவர் கோயில்வீதியில் உள்ள பழக்கடை வியாபாரிகள் யாழ். மாநகர சபையின் செயற்பாட்டைகண்டித்து வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்தி போராட்டம் ஒன்றைஇன்றையதினம் (பெப். 06) முன்னெடுத்தனர்.
வாழ்வாதாரத்தினை அடிப்படையாகக் கொண்டு கடைகளை அமைத்துஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில்ஒரு கடையில் குறைந்தது மூன்று பேர் வேலை செய்கின்றனர்.
இங்கு 31 கடைகள் உள்ளன. இவற்றில் குறைந்தது 100 பேர் தொழில்செய்கின்றனர். அதுமட்டுமல்லாது 100 குடும்பங்களின் வாழ்வாதாரம் இதில்தங்கியுள்ளது.
இந்நிலையில் யாழ். மாநகரசபையின் அதிகரிகள் எமது கடைகளின் அளவைஅதாவது அகலத்தை குறைத்து அடையாளமிடும் நடவடிக்கையை நேற்றையதினம்முன்னெடுத்தினிருந்தனர். ஆனால் நாம் எதிர்ப்பு காட்டியதை அடுத்து அது தடுத்துநிறுத்தப்பட்டது.
ஏற்கனவே 6 அடிகள் தான் ஒரு கடைக்கான இடப்பரப்பாக வழங்கப்பட்டது. இந்த 6 அடிகள் பொருட்கள், பழங்களை வைத்து விற்பனை செய்யும்தளபாடங்கள், குறைந்தது 3 வியாபாரிகள் என வியாபார நடவடிக்கைகளை கடும்சிரமத்தின் மத்தியில் மேற்கொண்டு வருகின்றோம் என பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுய தொழில் நடவடிக்கைகளையே எம்மால் முடிந்த முதலீடுகளை செய்துமுன்னெடுத்துவருகின்றோம்.
இதேநேரம் எமது இந்த சுயதொழில் நடவடிக்கையை தடுத்து, தமதுவருமானத்தை மட்டும் குறியாக கொண்டு இயங்கும் தற்போதைய அரசும்மாநகரசபையும் இந்த மாநகரசபை எமக்கான பொருளாதார ஈட்டலைவழங்குமா?
எமக்கான நியாயம் கிடைக்காவிடின் நியாயத்திற்காக நாம் எம்மால் முடிந்தவரைதொடர்ந்தும் போராடுவதற்கு தயாராகவே இரக்கின்றோம் என தெரிவித்தனர்.