வாக்களிக்க நெடுந்தீவு செல்லும் பயணிகள் கவனத்திற்கு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இன்று மாலை 04.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் துறைமுகத்திற்கான படகுச் சேவை இடம் பெறாமையால் நாளை காலை 08.00 மணிக்கு குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் இருந்து புறப்படும் படகுச் சேவை இடம் பெறுவதற்கான சந்தர்ர்பம் குறைவாகவே காணப்படுகின்றது.

ஆயினும் நாளை காலை நெடுந்தீவில் இருந்து புறப்படும் குமுதினிப்படகுச் சேவை வழமை போல 09.30 மணிக்கு குறிகட்டுவான் இறங்கு துறை முகத்தில் இருந்து புறப்படும் எனவே வாக்களிப்பதற்காக நெடுந்தீவு செல்லும் பயணிகள் காலை 09.30 மணிக்கு புறப்படும் குமுதினிப்படகினை பயன்படுத்துதல் சிறப்பாகும் காலையில் சென்று காத்திருப்தற்கான நேரத்தினை பயணிகள் மீதப்படுத்திக் கொள்ள முடியும் தற்போது கடும் காற்று நிலமையும் காணப்படுகின்றது.

இவ்வாண்டு தேர்தலில் பின்னராவது நெடுந்தீவிற்கான படகுச் சேவை சீராகுமா? என்பது நெடுந்தீவு மக்களின் கேள்வியாகவே இருக்கின்றது.

Share this Article