வாகன விபத்தில் தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே பலி!- தந்தை படுகாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வாகன விபத்தில் தாயும் மகனும் சாவடைந்துள்ளனர். தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கொழும்பு – மகரகம பிரதேசத்தில் நேற்று (ஓகஸ்ட் 5) இரவு இடம்பெற்றுள்ளது.

பாரவூர்தி ஒன்றும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் காரில் சென்றவர்களே பாதிப்படைந்துள்ளனர்.

காரைச் செலுத்திச் சென்ற 27 வயதுடைய இளம் பொறியியலாளரும், முன் ஆசனத்தில் அமர்ந்து சென்ற 55 வயதுடைய அவரின் தாயாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

காரின் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற 58 வயதுடைய தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article