வாகன வருமான வரி வழங்கும் சேவைகள் தடைப்படல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கடந்த வெள்ளிக்கிழமை (ஒக்.10) அன்று எதிர்பாராத விதமாக தொழில்நுட்பகோளாறு காரணமாக தடைப்பட்ட சேவைகள் தற்போது (ஒக்.13) வரையில்சீர்செய்யப்பட முடியவில்லை என வடமாகாண மோட்டார் போக்குவரத்துதிணைக்களம் அறிவித்துள்ளது.

அவ் அறிக்கையில்மேலும் தெரிவிக்கையில் …..

தடங்கலால்  சேவைகளை சீராக வழங்க முடியாமைக்கும் தங்களுக்கு ஏற்படும்அசௌகரியங்களுக்கும் எமது மனவருத்தத்தை தெரிவித்தக் கொள்கின்றோம்

மேலும் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாரிற்கும் அறிவித்தல்வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் வீண்அசௌகரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

10.10.2025 ஆம் திகதிக்கு பின்னர் முடிவடைந்த வாகன வருமான வரிக்கு (TAX) மட்டுமே தண்டம்  மற்றும் போக்குவரத்து பொலிஸாரின் சோதனையின் போது விலக்களிப்பினை எதிர்பார்க்க முடியும் என்பதனையும் கவனத்தில் கொண்டுசெயற்படுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

Share this Article