வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்களை காணும் ஒரு பயணம் நாளைமறுதினம் முன்னெடுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வழுக்கி ஆற்றின் வழிதோறும் உள்ள குளங்களை காணும் ஒரு பயணம் நாளைமறுதினம்(செப்ரெம்பர் 09) சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

தெல்லிப்பழை முதல் அராலி வரை இந்தப் பயணம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ் மாவட்ட செயலகம் மற்றும் துறைசார் திணைக்களங்கள் அனுசரணையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக WASPAR செயற்திட்டம், மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் கைகோர்ப்போடு வடக்கின் இளம் நீர்த்துறைமையாளர் வட்டம் ( Young water professionals- North) அமைப்பினால் இந்தப் பயணம் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

0773423576 | 0764658482 எனும் தொலைப்பேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு பயண விபரத்தை அறிந்து கொள்ளமுடிவதுடன், நிகழ்வில் தங்கள் வரவினை உறுதிசெய்யும் வகையில் பதிவினை மேற்கொள்ளவும் முடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Share this Article