வல்வை இந்திரவிழாவில் பிரமிக்க வைத்த இந்து தெய்வ உருவங்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ். வல்வெட்டித்துறையில் அண்மையில் இடம்பெற்ற இந்திர விழாவில், இந்து தெய்வங்களின் உருவங்கள் மின்னமைப்பினால் உருவாக்கப்பட்டமை அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

இலங்கையில் முன்னொருபோதும் இல்லாத வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இது வரலாற்றுச் சாதனையாக பதிவாகியுள்ளது.

இந்திரவிழாவிலே அனைத்து மக்களையும் கவர்ந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று இந்திரவிழாவை புதியதொரு பரிணாம வளர்ச்சிக்கு இட்டுச்சென்ற பெருமை ஆதிவைரவர் மின்னமைப்பையே சாருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திர விழாவில் சாதனை

2023 ஆண்டில் இந்திரவிழாவில் ஆஞ்சநேயர் 70 அடி உயரம், மாயவர் 28 அடி உயரம், 46 அடி அகலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் 50 அடி உயரம், கிருஷ்ணர் ராதை 34 அடி உயரம் காணப்பட்டு பக்தர்களின் மனதினை கொள்ளையடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article