வட மாகாண சட்டத்தரணிகள் யாவரும் பணிப்புறக்கணிப்பில். – யாழ்- சட்டத்தரணிகள் சங்கம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஊடக அறிக்கை.

05 அக்டோபர் 2025 அன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றும்சட்டத்தரணி ஒருவரின் இல்லத்தில் அவரை கைது செய்யும் முகதாவில்வீட்டிற்குள் நுழைந்து குறித்த வீட்டில் சட்டத்தினால் வழங்கப்பட்ட அதிகாரம்எதுவுமின்றி தேடுதல் நடத்தும் தோரணையில் அச்சுறுத்தலாக யாழ்ப்பாணம்விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலீசார் நடந்து கொண்டமையை கண்டித்து 07 அக்டோபர் 2025 அன்று வட மாகாணத்தில் உள்ள சட்டத்தரணிகள் யாவரும்பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர். இவ்வறிவித்தல் நாளை நீதிமன்றை நாடிவரும் பொது மக்களின் நன்மை கருதி வெளியிடப்படுகின்றது.

யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம்

06.10.2025

Share this Article