வட்டுக்கோட்டையில் பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

பூமணி அம்மா அறக்கட்டளையால் வட்டுக்கோட்டை துணைவிப் பகுதியிலுள்ள வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள 29 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக, குடும்பம் ஒன்றிற்கு 2 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் இன்று (ஜூன் 22) துணைவி கலைவாணி சனசமூக நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம், அறக்கட்டளையின் ஆலோசகரான இ.மயில்வாகனம், பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கை கிளையின் நிர்வாகசபை உறுப்பினரும் பொறியியலாளருமான சா.தவசங்கரி, துணைவி கலைவாணி சனசமூக நிலைய தலைவர் டேவிட் அன்ரனி ஜோய்,செயலாளர் செல்வராசா கெளசிகா,மாதர் சங்க செயலாளர் அ.புஸ்ப்பலலிதா ஆகியோர் பயனாளிகளுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.

Share this Article