வட்டுக்கோட்டையில் தாய்ப்பால் அருந்தியபின் உறங்கிய குழந்தை சாவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தாய்ப்பால் அருந்திவிட்டு உறங்கிய 3 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று(செப்ரெம்பர் 24) வட்டுக்கோட்டை மேற்கில் நடந்துள்ளது. கி.கரிகரன் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.

நேற்றுக் காலை தாய்ப்பால் அருந்திய பின்னர் குழந்தை ஏணையில் இடப்பட்டது. சிறிதுநேரத்தின் பின்னர் குழந்தை அசைவற்றிருப்பதை அவதானித்த பெற்றோர், குழந்தையை சங்காணை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டது என்று அறிக்கையிட்டுள்ளனர். இறப்பு விசாரணைகளை திடீர் வலிகாமம் கிழக்கு இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Share this Article