வடலியடைப்பு சனசமூக நிலையத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (பெப்ரவரி 18) இரத்ததான முகாம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அமரர் ச.கணநாத் நினைவாக இந்த இரத்ததான முகாம் காலை 8.30 மணி முதல் மதியம் 2:00 மணிவரை செயற்படவுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதித்தட்டுப்பாடு காரணமாக இந்த முகாம் இரத்ததான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
உயிர்காக்கும் உன்னத பணியில் அனைத்து நண்பர்களும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.