நெடுந்தீவு பிரதேசத்தில் சுய தொழில் முயற்சியில் ஈடுபடுவோர் மற்றும் வளங்கள்மற்றும் தேவைகளை அறிந்து கொள்ளும் வகையிலும் அதற்கான தகவல்கள் திரட்டும் நோக்கத்துடனும் வடமாகாண சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கசமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (ஜூன்03) காலை 10.00 மணியளவில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல்இடம்பெறவுள்ளது.
நெடுந்தீவு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சாத்தியமான செயற்றிட்டங்கள்இருப்பின் அவற்றினூடாக உதவிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக முதற்கட்டமாக இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் நெடுந்தீவு மீது பற்றுக் கொண்டவர்களும், இதன் மூலம் பயன்பெறவுள்ள மக்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம் 05 மாவட்டங்களிலும் பாரிய நிதிப்பங்களிப்புடன் கூட்டுறவு ஊடாக வெற்றிகரமானசெயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.