நாளை (மார்ச் 15) நடைபெறவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
வாழ்க்கைச் செலவு உதவு தொகையாக 20 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும்.
அரச ஊழியர்களின் கடனுக்காக வங்கியால் ஒருதலைப்பட்சமாக உயர்த்தப்பட்ட வட்டி வீதத்தைக் குறைக்க வேண்டும்.
நியாயமற்ற முறையில் அறவிடப்படும் மின்சாரக் கட்டணத்தை குறைத்தல்
அனைத்து அலுவலர்களுக்கும் ஓய்வூதிய உரிமையை உறுதி செய்தல்.
அரச சுற்றறிக்கைகளைப் புறந்தள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் பணிக்கமர்த்தும் செயற்பாட்டை அதிகாரிகள் உடனடியாக நிறுத்துதல். (நலன்புரி நன்மைகள் சபையின் தரவேற்றல் செயற்பாடு உள்ளடங்கலாக)
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைப்பிரமானக் குறிப்பைப் பூரணப்படுத்துதல்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பதிலீட்டுக் கடமைக் கொடுப்பனவு மற்றும் ஏனைய படிகளை வழங்குதல்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழில் கௌரவத்தைப் பாதுகாத்தல்
என்ற கோரிக்கைகளின் அடிப்படையில் நாளை முன்னெடுக்கப்படும் அடையாளப் பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட மத்திய, மாகாண அரசுகளின் கீழான அமைச்சு, திணைக்களங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமையைப் பகிர்ஷ்கரித்து ஆதரவு வழங்க வேண்டும் என்று வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.