வடமாகாணத்தில் நேற்று 226 தொற்றாளர்கள்

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

வடமாகாணத்தில் நேற்று 226 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் யாழ் மாவட்டத்தில் 185 தொற்றாளர்கள் உள்ளடங்குகிறார்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம், நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனை, யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நேற்று நடத்தப்பட்ட பிசிஆர் சோதனைகளில் இவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 62 பேரும், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 44 பேரும் (இவர்களில்‌ அதிகமானோர்‌ நேற்றுமுன்தினம்‌. முடக்கப்பட்ட அந்தோனிபுரத்தைச் சேர்ந்‌தவர்கள்‌), சண்டிலிப்பாய்‌ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்‌ 25 பேருக்கும்‌, உடுவில்‌ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்‌ 16 பேருக்கும்‌, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்‌ 8 பேருக்கும்‌, பருத்தித்துறை சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவில்‌ 3 பேருக்‌கும்‌, யாழ்ப்பாணம்‌ சிறைச்சாலையில்‌,3 பேருக்கும்‌, யாழ்ப்பாணம்‌ போதனா மருத்துவமனையில்‌ 11 பேருக்கும்‌ (அதிகளவானோர்‌ வங்கி ஊழியர்கள்‌), கோப்‌பாய்‌ பிரதேச மருத்துவமனையில்‌ 3 பேருக்கும்‌, பருத்தித்துறை ஆதார மருத்‌துவமனையில்‌ 5 பேருக்கும்‌, சங்கானை பிரதேச மருத்துவனை, அளவெட்டி பிரதேச மருத்துவமனை மற்றும்‌ வட்டுக்‌கோட்டை பிரதேச மருத்துவமனை ஆகியவற்றில்‌ தலா ஒருவருக்கும்‌ என்று 185 பேருக்குத்‌ தொற்று உறுதிப்படுத்‌தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டம்‌:

கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில்‌ 3 பேருக்கும்‌, மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்‌ 2 பேருக்‌கும்‌, பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்‌ 3 பேருக்கும்‌, பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்‌ 5 பேருக்கும்‌ என்று 19 பேருக்குத்‌ தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம்‌

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல்நிலையத்தில்‌ 4 பேருக்கும்‌, புதுக்குடியிருப்புஆதார மருத்துவமனையில்‌ 3 பேருக்‌கும்‌ என்று 7 பேருக்குத்‌ தொற்று உறுதிப்‌படுத்தப்பட்டுள்ளது.

மன்னார்‌ மாவட்டம்‌

மன்னார்‌ மாவட்டத்தில்‌ மன்னார்‌ நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்‌ 17 பேருக்கும்‌, மன்னார்‌ மாவட்ட மருத்துவமனையில்‌ 2 பேருக்கும்‌ என்று 19 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்‌டுள்ளது.

வவுனியா மாவட்டம்‌.

பூவரசங்குளம்‌ பிரதேச மருத்துவமனை மற்றும்‌ செட்டிக்குளம்‌ ஆதார மருத்துவமனை ஆகியவற்றில்‌ தலா ஒவ்வொருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்‌ளது.

Share this Article