கால்நடைகள் வடக்கு மாகாணத்தில் திருடப்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து கால்நடைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையை கட்டாயமாக்குமாறு வட மாகாண ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார் என தெரிய வருகிறது.
கன்று பிறந்து 18 மாதங்களுக்குள் காது அடையாள வில்லைகளை (Ear Tag) பொருத்திக் கொள்வதை கட்டாயமாக்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாதகால்நடை வளர்ப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர்பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் இறைச்சிக்காக வெட்டப்படும் மாடுகளின் காது அடையாள வில்லைகள் (Ear Tag) பரிசோதிக்கப்பட வேண்டும் எனவும்,
உரியநடைமுறைகளை பின்பற்றாத இறைச்சி வெட்டும் இடங்கள் மற்றும் விற்பனை செய்யும் இடங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர்தெரிவித்துள்ளார்