வடமராட்சி தெற்கு பிரதேச சபை மண்டபத்தில் இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் ஏற்பட்ட இரத்த தட்டுப்பாட்டையடுத்து NERO அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் இன்று காலை (மார்ச் 20) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

வடமராட்சி தெற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த இரத்ததான முகாமுக்கு சமூகம் கொடுத்து இரத்ததானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு உதவுமாறு அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Share this Article