வடமராட்சியில் மின்சாரம் தாக்கி 26 வயது இளைஞன் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
Electrician receiving electric shock while working, closeup

வல்வெட்டித்துறை, வன்னிச்சியம்மன் ஆலயத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கியதில் 26 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (மார்ச் 22) பிற்பகல் நடந்துள்ளது.

காரைநகர், நிலக்காட்டைச் சேர்ந்த குமாரசாமி சுதாகரன் என்ற 26 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இவர் வீடொன்றில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். வீட்டின் மேற்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த போது தரப்பாளைக் கம்பியால் உயர்த்தும்போது, கையில் இருந்த இரும்புக் கம்பி, உயர் மின்னழுத்த கம்பியில் தொடுகையுற்று மின்சாரம் தாக்கியுள்ளது என்று கூறப்படுகின்றது.

மின் தாக்கத்தால் தூக்கி வீசப்பட்ட இளைஞர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என அங்கு மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share this Article