வடக்கு மீனவர்களின் வலைகள் நாசம்! – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்பரப்பில் நேற்று இரவு கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்களின் வலைகள் நாசமாக்கப்பட்டுள்ளன.

சுமார் 12 லட்சம் பெறுமதியான வலைகள் இந்திய இழுவை மடி படகுகளால் அறுத்து நாசம் செய்யப்பட்டுள்ளன என்று வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சுழிபுரம் திருவடி நிழலை கடற்பரப்பிலும் இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியிருந்தது.

Share this Article